சாவடி பூஜையில் ரசிகரை குஷிப்படுத்திய விக்ரம்

8001895A-701C-4C24-8C5C-3C3D77265806_L_styvpfநடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சாவடி’. இப்படத்தில் இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இவரே இயக்கவும் செய்கிறார். சட்டவிரோதமான பைக் ரேஸை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்காக உண்மையான பைக் ரேஸர்களை வரவழைத்து அவர்களிடம் பயிற்சி எடுத்து நடிக்கவிருக்கிறார் ஸ்ரீதர் மாஸ்டர்.

இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த விழாவின் ஹைலைட்டாக சீயான் விக்ரம் நேரில் வந்து மாஸ்டர் ஸ்ரீதரையும், படத்தில் பணிபுரியவிருக்கும் அனைவரையும் வாழ்த்தினார். சீயான் விக்ரம் இந்த விழாவுக்கு வருகிறார் என்றதும் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது.

இந்நிலையில், விழாவில் பங்கேற்றுவிட்டு வேகமாக கிளம்பிய சீயான் விக்ரமை ரசிகர்கள் அனைவரும் அவரது பெயரை உச்சரித்து அழைக்க ஆரம்பித்தனர். ஒரு ரசிகர் மட்டும் விக்ரம் பின்னாலேயே அண்ணா அண்ணா என்று அழைத்துக் கொண்டே சென்றார்.

வேகமாக சென்ற விக்ரம் ஒரு நிமிடம் நின்று அந்த ரசிகரை தன்னுடன் அழைத்து, அருகிலிருந்து புகைப்படக் கலைஞரை அழைத்து புகைப்படம் எடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

புகைப்படம் எடுத்து முடிந்ததும் ரசிகர் தன்னுடைய ஆசை நிறைவேறியதாக எண்ணி அவரிடம் கைகொடுத்து விடைபெற்றார். பின்னர் விக்ரம் நேராக தன்னுடைய காருக்கு சென்றுவிட்டார். அங்கேயும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். பின்னர் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

விக்ரம் இதுபோல் ரசிகர்கள் மீது அன்பு காட்டுவது என்பது புதிதல்ல. சமீபத்தில்கூட விருது வழங்கும் விழாவில் தன்னை பார்க்க வந்த ரசிகரை அன்போடு அரவணைத்து அந்த ரசிகரின் விருப்பப்படி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக விக்ரம் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். ரசிகர்கள் மிகவும் விருப்பப்படும் நடிகராகவும் அவர் மாறியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online