குற்றப்பரம்பரை பட விவகாரம்: எழுத்தாளர் சங்கத்தில் டைரக்டர் பாலா மீது புகார்

mfs_dic bala_newsகுற்றப்பரம்பரை கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

குற்றப்பரம்பரை கதையை படமாக்கவில்லை என்று பாலா மறுத்தார். பாரதிராஜாவும் ரத்னகுமாரும் தன்மீது அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து எழுத்தாளரும் டைரக்டருமான ரத்னகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘குற்றப்பரம்பரை நான் எழுதிய கதை. பெருங்காம நல்லூர் துப்பாக்கி சூட்டில் என் தாத்தாவை இழந்ததால் இந்த கதையை எழுதி 1993-ல் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். பாரதிராஜா இதனை படமாக்க முன் வந்தார். சிவாஜி கணேசனும் சரத்குமாரும் நடிப்பதாக இருந்தது. இளையராஜா இசையில் ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சிவாஜிகணேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்த படத்தின் கதை விவாதத்தில் இருந்த வேல ராம மூர்த்தி எனது கதையை திருடி கூட்டாஞ்சோறு என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். பிறகு அதனை குற்றப்பரம்பரை என்ற பெயரில் மாற்றி மீண்டும் புத்தகமாக வெளியிட்டார்.

இந்த கதையைத்தான் பாலா படமாக்க முடிவு செய்தார். இதனை எதிர்த்ததால் பாலா என்னையும் பாரதிராஜாவையும் அவதூறாக பேசுகிறார். எச்சரிக்கையும் விடுக்கிறார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. டைரக்டர் பாலா மீது எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online