பிரேமம் மலர் டீச்சர் போல் என் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும்: ஜனனி

4பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில், தனது காந்த கண்களாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஜனனி. இவர் தற்போது ‘உல்டா’ மற்றும் ‘தொல்லைக்காட்சி’ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

“ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் ‘உல்டா’. சைக்கலாஜிக்கல் திரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக உள்ளது.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளரான சதிக்கான் இயக்கும் படமான ‘தொல்லைக்காட்சி’யின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இப்படம் குறித்து ஜனனி பேசும்போது,

‘இந்த படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் மலர். முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறேன். பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அது போல இந்த படத்தில் என்னுடைய மலர் கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்!” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries