செங்கல்பட்டு பகுதியில் தெறி ரிலீஸ் ஆகாததற்கு காரணம் என்ன?: தாணு விளக்கம்

Kalaipuli-S-Thanuவிஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதுதொடர்பாக சென்னை பிலிம் சேம்பரில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, செயலாளர் சிவா, தேனப்பன், ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது தாணு பேசுகையில், “தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிரீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அப்படியிருக்கும்போது சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

செயலாளர் சிவா கூறுகையில், “படம் ரிலீசாகி ஓடுவது என்பது கடினமாக உள்ள இந்த சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, வரும் காலங்களில் வரக்கூடிய பெரிய படங்கள் இந்த தியேட்டர்களுக்கு கெடுக்கப்படமாட்டாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியவேண்டும்.

ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள மண்டபங்களில் ஸ்கிரீன் போட்டு, உரிய அனுமதியுடன் படத்தை ஓட்ட ஏற்பாடு செய்தாலும் செய்வோமே தவிர இத்தகைய தியேட்டர்களுக்கு கொடுக்க மாட்டோம்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் தெறி படத்தை படம்பிடித்தபோது பிடிபட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries