ஒரு முகன் முடிந்தது

1460712981-101ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு முகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமின் ஒரு முகம் முடிந்ததாக ஆனந்த் ஷங்கர் கூறியுள்ளார்.

இரு முகனில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள். அதில் ஒன்றில் தாடி வைத்து நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை, லடாக், பாங்காக், மலேசியா என பல இடங்களில் எடுத்து முடித்துள்ளனர்.

அதைத்தான் ஒரு முகன் முடிந்தது என ஆனந்த் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். விக்ரமின் இன்னொரு வேடம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் எடுக்க உள்ளனர்.

ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள். இதுவரை நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளே படமாக்கப்பட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online