பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நடன இயக்குனர்களுடன் நடிப்பதில் ஒரு சிரமம், கஷ்டமான ஸ்டெப்களை வைத்து நாயகியின் பெண்டை கழற்றிவிடுவார்கள்.
இவர்களின் படங்களில் ஆடினால் பிறகு ருத்ரதாண்டவமும் இலகுவாகிவிடும்.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சுடன் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இதுவரை பட்டும் படாமலும் ஆடிக் கொண்டிருந்த நிக்கி கல்ராணியை இந்தப் படத்தின் பாடல் காட்சியில் நிற்காமல் ஆட வைத்துள்ளார் லாரன்ஸ்.
படத்துக்குப் படம் கஷ்டமான வித்தியாசமான நடன அசைவுகளை முயற்சி செய்யும் லாரன்ஸ், நாயகிகளையும் அதே ஸ்டெப்களை ஆடும்படி செய்வது எங்ஙனம் நியாயமாகும்?
விலங்குகள் நலவாரியம் மாதிரி, நடிகைகள் நலவாரியம் அமைக்கிற தேவை இருக்கு.