தெறி படம் வெளியாகாததால் சாலைமறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்: காவல்துறையினர் தடியடி

1460695179-8514செங்கல்பட்டில் “தெறி” படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதேபோல காரைக்குடி, புதுச்சேரியில் போராட்டம் நடத்திய ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடித்த “தெறி” திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது.

அதன்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகிலுள்ள திரையங்கிலும் “தெறி” திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் அந்த திரையரங்கில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகளை அமைத்திருந்தனர். அத்துடன், தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் திரண்டனர். ஆனால் நேற்று பகல் 11 மணியாகியும் “தெறி” திரைப்படம் வெளியாகவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தினர்.

இந்த சாலை மறியல் காரணமாக செங்கல்பட்டு – திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் மட்டும் “தெறி” படம் திரையிடப்பட்டதால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

இந்நிலையில், காரைக்குடியில் “தெறி” படம் வெளியான ஒரு தியேட்டரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.

இதைத் தொடர்ந்து, பேனர்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் கோஷமிட்டனர். காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries