அதர்வாவுக்கு ஜோடியான பெங்காலி நடிகை

201604161559232501_Bengali-actress-paired-to-atharva_SECVPF‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் அதர்வா. இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படம் இவரை பிரபலம் ஆக்கியது. சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி, கணிதன் படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்றைப் பெற்றன. தற்போது ‘ருக்குமணி வண்டி வருது’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து சொந்தமாக தயாரிக்கும் அதர்வாவின் படத்துக்கு ‘செம போத ஆகாத’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு நாயகிகளுடன் நடிக்கிறார். அவர்களில் ஒருவர் பெங்காலி நடிகை மிஷ்டி. இன்னொருவர் அனைகா இவர் வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர்.

வித்தியாசமான கதை என்பதால் தனது சொந்த படத்துக்கு வித்தியாசமான பெயரை அதர்வா வைத்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online