நடிகராக ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தேன்: எஸ்.ஜே.சூர்யா

201604161402152841_I-wanted-to-be-an-actor-in-cinema-SJ-Surya_SECVPFவிஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி நடித்த ‘இறைவி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இறைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா….

“நான் நடிகர் ஆகும் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக ‘வாலி’, ‘குஷி’ படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இயக்குனர் ஆனேன்.

‘நியூ’, ‘வியாபாரி’, ‘இசை’ உள்பட பல படங்களில் நடித்தேன். இப்போது முதல் முறையாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். இது பேசப்படும். இறைவி பெண்களின் உணர்வை மதிக்கும் இந்த படம் எனது கனவில் ஒரு பாதியை நிறைவேற்றும் படம்” என்றார்.

விஜய் சேதுபதி இறைவி படம் பற்றி கூறும்போது,

“ஆண்களின் உலகை சுற்றி அம்மா, மனைவி, சகோதரி, காதலி என்று இருக்கும் இவர்களின் கதையே இறைவி. வெளியே காட்டாமல் விட்ட பெண்களின் மறுபக்கமே இதன் கதை.

இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வருபவர்கள், இவர்களை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற உணர்வுடன் உருவார்கள். பல படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்றாலும் ‘இறைவி’ திரையிடப்படும் முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன்” என்றார்.

பாபி சிம்ஹா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரும் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online