சினிமாவில் சாதிக்க நடிகைகளுக்கு தைரியம் அவசியம்: தமன்னா

201604160745322852_actresses-Need-brave-to-achieve-in-cinema-Tamanna_SECVPFநடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறேன்.

இத்தனை காலமும் சினிமா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும்தான் எனக்குள் இருந்தது. வேறு எதுவும் தெரியாது.

நான் வட இந்திய கலாசாரத்தில் வளர்ந்த பெண். எனக்கு தென்னிந்திய மொழி படங்களில் வாய்ப்பு வந்தன. மொழி, பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாமல் அந்த படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

எதற்கும் பயப்படவில்லை. தைரியம் மட்டும் எனக்குள் இருந்தது. அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. அப்போது தெரியாத மொழி என்று நடிக்க தயங்கி இருந்தால் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது.

எனவே நடிகைகள் சாதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு தைரியம் அவசியம். சினிமாவில் வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. கடினமாக உழைக்கிறேன். படம் ஜெயிப்பதும் தோற்பதும் ரசிகர்கள் கையில் இருக்கிறது.

நடிகையாக இருப்பதை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். அனுபவங்கள் மூலம் நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டு விட்டேன். இது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை எனக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது’’.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online