சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருக்குமா சிம்பு பட தலைப்பு

201604181956382192_Simbu-be-incurring-controversy-Image-Caption_SECVPFசிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், இப்படத்தில் மேக்கப் பணிக்காக ஹாலிவுட் கலைஞர் சீன் பூட் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படத்தின் தலைப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்திற்கும் தலைப்பை பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்து, அதற்கான பரிசீலனையில் இறங்கினர்.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘AAA’ என்று வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிப்பதால் மூன்று கெட்டப்பிலும் வரும் சிம்புவுக்கு வரும் பெயர்களில் முதல் எழுத்தை வைத்து இந்த தலைப்பை உருவாக்கியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த தலைப்பின் முழு விவரம் மே 1-ந் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் சிம்புவுக்கு, அவரது படத்தலைப்பாவது சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries