சசியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்?

201604181107288975_GV-Prakash-Joint-Hand-with-Sasi_SECVPFஇயக்குனர் சசி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சசி, தனது அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு பேமிலி எண்டர்டெய்மென்ட் படமாக எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷை சசி நேரில் சந்தித்து கதை ஒன்று விளக்கி கூறியதாக கூறப்படுகிறது. சசி சொன்ன கதை பிடித்து போனதும் ஜி.வி.பிரகாஷ் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் சசி படத்திற்கு குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க சிறிது காலஅவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் கைவசம் புருஸ்லீ, கடவுள் இருக்கிறான் குமாரு, ராஜீவ் மேனன் இயக்கும் புதிய படம், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இப்படங்கள் முடிந்தபிறகு சசி இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries