சைனிக் பள்ளி மாணவர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்: அமீர்கான்

201604181017082269_1-was-greatly-impressed-by-Sainik-School-students-Aamir-Khan_SECVPFநாட்டின் முதலாவது சைனிக் பள்ளிக்கூடம் சதாராவில் செயல்பட்டு வருகிறது. ராணுவத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் உன்னத நோக்கத்துடன் இந்த பள்ளிக்கூடம், முன்னாள் ராணுவ மந்திரி கே.வி.கிருஷ்ண மேனனால் 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த சைனிக் பள்ளிக்கூடத்துக்கு இந்தி நடிகர் அமீர்கான் வருகை புரிந்தார். பள்ளிக்கூட கலையரங்கில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ‘‘உங்களுடைய ஒழுக்கநெறி மற்றும் தேசப்பற்றை பார்த்து நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்’’ என்று அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், மராட்டியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்றும், முடிந்தவரை தண்ணீரை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அவர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது தவிர, கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் உடனான தாக்குதலில், வீரமரணம் அடைந்த 37 வயது கர்னல் சந்தோஷ் மகாதிக்கின் தியாக உணர்வையும், தனது பேச்சின்போது அமீர்கான் நினைவுகூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, சதாரா நகரில் நடைபெற்ற நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அமீர்கான் பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries