ரஜினி, கமலை தொடர்ந்து வடிவேலு படத்தையும் தயாரிக்கும் லைக்கா

Imsai-Arasan-23m-Pulikesiவடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. வடிவேலு ஹீரோவாகவும், சிம்புதேவன் இயக்குனராகவும் அறிமுகமான படம் இதுதான். காமெடி மற்றும் சரித்திர பின்னணியில் உருவான இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.

வெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகமாக எடுப்பது தமிழ் சினிமாவில் தற்போது வழக்கமான ஒன்றாகி வருவதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க சிம்புதேவன் முடிவு செய்தார். முந்தைய பாகத்தில் ஹீரோவாக நடித்த வடிவேலுவையே இந்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகாத நிலையில், தற்போது இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. முந்தைய பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

லைக்கா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தை தயாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வெற்றிவேல்’, கமல் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online