காமெடி வில்லனாக மாறிய பவர் ஸ்டார்

37EF0F7C-B541-4D8D-AF38-C6D856553A38_L_styvpfதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன். எந்த அளவுக்கு அவருக்கு புகழும், படவாய்ப்புகளும் குவிந்ததோ, அதே வேகத்தில் அவருடைய மார்க்கெட்டும் சரியத் தொடங்கியது. பவர் ஸ்டாரை ஒப்பந்தம் செய்துவிட்டு, தங்களது படங்களுக்கு ஹீரோ தேடிய எத்தனையோ தயாரிப்பாளர்கள், தற்போது அவரை சீண்டுவதுகூட கிடையாது.

இருப்பினும், அவ்வப்போது ஒருசில படங்களில் இவர் தலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். இதுவரை காமெடியில் கலக்கிய பவர் ஸ்டார் தற்போது வில்லனாக மாறியிருக்கிறார். அதுவும் காமெடி வில்லனாக மாறியிருக்கிறார். அறிமுக இயக்குனர் ஷக்தி ஸ்காட் இயக்கும் ‘ஜெயிக்கப் போவது யாரு’ என்ற படத்தில்தான் பவர் ஸ்டார் காமெடி வில்லனாக கலக்கியிருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாண்டியராஜனும் நடிக்கிறார். நாயகனாக இயக்குனர் ஷக்தி ஸ்காட்டே நடிக்கிறார். நாயகியாக வந்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கார் ரேஸ், பைக் ரேஸ் ஆகிய விஷயங்களை இந்த படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார்களாம. இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு ஆகிய இடங்களில் நடத்தி முடித்துள்ளனர்.

இப்படத்தை டிட்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.பானுசித்ரா என்பவர் தயாரித்து உள்ளார். இவர் ஏற்கெனவே ‘அதிசய உலகம்’ என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries