மம்முட்டி மகனுடன் மலையாள படத்தில் நடிக்கும் மாதவன்

201604201241391139_Madhavan-starrer-malayalam-film-with-Mammootty-son_SECVPFநீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் தயாரித்து, நடித்து தமிழ், இந்தியில் வெளியான இறுதிச்சுற்று வெற்றிப் படமாக அமைந்தது. இதில் அவருடன் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இப்போது மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்திருக்கிறது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் லவ்இன் என் ஜென்கோ படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். நடிகரும் இயக்குனருமான பிரதாப்போத்தன் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தயாரான மேட்இன் யு.எஸ்.ஒ. படத்தில் மாதவன் நடித்தார். அதன் பிறகு இந்த மலையாள படத்தில்தான் நடிக்கிறார்.

பிரதாப்போத்தன், மாதவன் இந்த பாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் மாதவனிடம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்துககு இளையராஜா இசை அமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries