மருமகள் ஐஸ்வர்யா ராய்க்காக விட்டுக்கொடுத்த அமிதாப்பச்சன்

201604201645363961_Amitabh-postpones-TE3N-release-date-makes-way-for-Aishwarya_SECVPFவயது ஆனாலும் அமிதாப் பச்சன் இப்போதும் பிசியான ஹாலிவுட் நடிகராகவே இருந்து வருகிறார். இவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் இந்தி படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அமிதாப்பச்சன் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் இந்தி படம் ‘டிஇ3என்’ இந்த படத்தை வருகிற மே மாதம் 19–ந்தேதி திரையிட திட்டமிட்டு இருந்தனர்.

இது போல் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தையும் அதே தேதியில் ‘ரிலீஸ்’ செய்ய முடிவு செய்து இருக்கிறார். உணர்ச்சி பூர்வமாக தான் நடித்துள்ள இந்த படத்தை ஐஸ்வர்யா ராய் மிகவும் எதிர்பார்க்கிறார்.

இரண்டு படங்களும் ஒன்றாக வந்தால் மருமகள் ஐஸ்வர்யா ராய் படத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று கருதிய அமிதாப் பச்சன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க விரும்பினார்.

இதற்காக அவர் தனது படத்தின் இயக்குனர் ரிபுதாஸ் குப்தா, தயாரிப்பாளர் கஜாய் கோஸ் ஆகியோரை சந்தித்து தான் நடித்துள்ள படத்தை தாமதமாக வெளியிடும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து “டிஇ3என்” படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மருமகளுக்காக மாமனார் விட்டுக் கொடுத்திருப்பதை இந்தி திலையுலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online