ஜெயிக்கப் போவது யாரு? – மீண்டும் பவர் ஸ்டாரு

1461239855-3999தனக்குத்தானே பவர் ஸ்டார் என்று பட்டம் வைத்து, நடிகர் சீனிவாசன் செய்துவரும் அளும்புகள் தமிழர்களுக்கு போரடிக்க ஆரம்பித்து மாதங்களாகிறது.

காமெடியும் செய்யத் தெரியாமல், சரியாக நடிக்கவும் தெரியாமல் இந்த இம்சை அரசன் செய்கிற கூத்துக்களை கண்டு கண்ணே பொசுங்கிவிட்டது. இந்நிலையில், அவுட் ஆஃப் பேஷனாகிப் போன பவரை வில்லனாக்கி ஒரு படத்தை எடுத்து வருகிறார், ஷக்தி ஸ்காட் என்பவர்.

நகைச்சுவையாக தயாராகிவரும் இந்தப் படத்தில் ஷக்தி ஸ்காட்டே நாயகனாக நடித்துள்ளார். காமெடி வில்லனாக பவர் ஸ்டார். முக்கியமான வேடத்தில் பாண்டியராஜன்.

படத்தின் ஸ்டில்லைப் பார்த்தாலே படத்தின் தரம் தெரிந்துவிடுகிறது. தியேட்டருக்குப் போய் பார்ப்பதெல்லாம் அவரவர் விதிவழிப்பட்டது.

ஷக்தி ஸ்காட் ஷக்தி சிதம்பரத்தின் அண்ணனாக இருப்பாரோ.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online