நடிகர் சங்கம் ஒன்றும் கிளப் அல்ல : சிம்பு விலகல் குறித்து விஷால் கருத்து

1461237814-8563தனக்கு பிரச்சனை வந்தபோது, நடிகர் சங்கம் உதவவில்லை என்று புகார் கூறிய நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பீப் ஸ்டார் நடிகர் சிம்பு ஒரு ஆங்கில இணையதள பத்திரிக்கை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது “நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்சனைகள் வரும்போது நடிகர் சங்கம் உதவ வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதில் அவர்கள் தோல்வி அடைந்து வருகின்றனர். நான் பிரச்சனைகளை சந்தித்தபோது, நடிகர் சங்கம் எனக்கு ஆதரவையும், பிரச்சனைக்கான தீர்வையும் ஏற்படுத்த முன்வரவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், எல்லா நடிகர்களையும் அழைத்து ஜோக்கர் ஆக்கிவிட்டனர். எனவே நடிகர் சங்கத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார்.

சிம்புவின் இந்த முடிவு, திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் “பீப் பாடல் சம்பந்தமாக, சிம்புவிற்கு பிரச்சனை எழுந்த போது, நடிகர் சங்கம் உதவ முன் வந்தது. ஆனால், சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும், தாங்கள் சட்டப்படி அதை சந்திப்பதாக கூறிவிட்டார்கள். ஆதனால் நடிகர் சங்கம் ஒதுங்கிக்கொண்டது.

தற்போது சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளர். விருப்பப்படி வருவதற்கும் போவதற்கும் நடிகர் சங்கம் ஒன்றும் கிளப் அல்ல. பொதுவாக, ஒருவரை நீக்குவது என்றால் நடிகர் சங்கம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு எல்லாம் தலை கீழாய் இருக்கிறது. இதுபற்றி கலந்து ஆலோசித்து நடிகர் சங்கும் முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries