புதுமைக்காக நாய்களை காதலிக்க வைத்த இயக்குனர்

1461219638-8709மக்கள் புதுமையை விரும்புகிறார்கள் என்பதற்காக இயக்குனர் ரங்கா இரு நாய்களின் காதலை படமாக எடுத்து வருகிறார். காமெடியெல்லாம் இல்லை, உண்மையாகவே.

நிதின் சத்யா வளர்க்கும் டோனி என்ற நாய் காணாமல் போகிறது. அந்த நாயை நிதின் சத்யா, நான்கு திருடர்கள், இரு அரசியல்வாதிகள் தேடுகிறார்கள். ஏன் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜீனோ என்ற பெண் நாயை வளர்க்கிறார். டோனியும், ஜீனோவும் திருமணம் செய்து கொள்கின்றன. முதலிரவு, டூயட் எல்லாம்கூட இந்த நாய் ஜோடிகளுக்கு இருக்கிறது. இதற்காக பக் இனத்தைச் சேர்ந்த இரு நாய்களை வாங்கி ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

நாய் பொழப்புங்கிறது இதுதானோ.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online