கவுண்டமணியை காப்பி அடித்தேன் – சந்தானம் ஓபன் டாக்

1461212140-1931நக்கல் நய்யாண்டிக்கு இன்றும் கவுண்டமணிதான் அத்தாரிட்டி. அவரது மலிவு பதிப்புதான் சந்தானம் என்று பலரும் கமெண்ட் அடிப்பதுண்டு.

அட, நீங்க என்ன சொல்றது, நானே அதை ஒத்துக்கிறேன் என்பது போல் படவிழாவில் பேசினார் சந்தானம்.

கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கவுண்டமணியுடன் சந்தானமும் கலந்து கொண்டார்.

பொதுவாக தான் நடித்தப் படங்களின் பாடல்கள் வெளியீட்டுக்கே வராதவர் சந்தானம்.

விழாவில் பேசிய அவர்,

கவுண்டமணி சார் ஒரு காமெடி கிங். அவருக்கு இனை அவர்தான். அவர் அந்தக்கால அஜித் மாதிரி. எந்த சினிமா விழாவிலும் பங்கேற்க மாட்டார்.

படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும். எல்லா காமெடியன்களும் அவரைத்தான் பின்பற்றுகிறார்கள். நானும் அப்படித்தான்.

சில சமயம் காமெடிக் காட்சிகளுக்கு டயலாக் கிடைக்காத போது அவரது காமெடிக் காட்சிகளைப் போட்டுப் பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துதான் நடிப்பேன், பேசுவேன்.

டைமிங் காமெடியில் அவருக்கு இணை அவர்தான். அவரை யாராலும் நெருங்கவும் முடியாது, அவர் இடத்தை யாராலும் தொடவும் முடியாது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries