MENUMENU

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸிகள்

1461299450-3735நெருப்பாய் எரிந்த வெறுப்பு

அந்நியனும், சிங்கமும் சினேகமாகத்தான் இருந்தார்கள். மில்க் இயக்குனரின் படத்தில் இணைந்தும் நடித்தார்கள். ஆனால், சிங்கத்தின் திருமணத்துக்கு அந்நியனுக்கு அழைப்பில்லை. இருவருக்கும் எதுவும் தகராறா?

இந்த கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதிலளிக்கலாம். ஆனாலும், இப்போதைக்கு அந்த விவகாரத்தை கிளறாமல் இருப்பதே நலம். திருவாளர்களைப் பற்றி பேசலாம். திருமதியைப் பற்றி பேசுவது நாகரிகமல்ல.

பல வருடங்களாக தொடரும் இந்த வெறுப்பும் விலகலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போதும் வெளிப்பட்டது. சிங்கத்தை ஷீல்டு வாங்க அழைக்க, அந்நியன் மேடையில் இரண்டு ஸ்டெப் பேக்கடித்து வெறுப்பை உறுதி செய்தார். பிறகு ஷீல்டை இணைந்து வழங்குவதற்கு பதில் உலக நாயகன் தனியாக சிங்கத்துக்கு ஷீல்டு தந்தார்.

இந்த மௌன யுத்தம் காரணமாக பழைய விஷயங்களை மீண்டும் கிளறி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

அஞ்சோ பத்தோ அடுத்தவூட்டு காசுதானே

காமெடி புயல் மீண்டும் இம்சையரசனாக அவதாரம் எடுக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த பிரமாண்ட இயக்குனர் முதல் காப்பி அடிப்படையில் லைக்காவுக்கு இரண்டாம் பாகத்தை தயாரித்து தருகிறார்.

புயலுக்கு வெற்றிகரமாக அமைந்த ஒரே படத்தை தயாரித்தவர் பிரமாண்டம். இருந்தும் கறாராக 5 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார் புயல். ஆச்சரியமாக பிரமாண்ட இயக்குனர் மறுப்பேதும் கூறிவில்லையாம்.

முதல்காப்பி அடிப்படையில் தயாரிப்பதால் புயலுக்கான சம்பளத்தை தரப்போவது லைக்காதான். இரண்டாம் பாகத்தை எடுக்கவும் அவர்கள்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இடையில் சில கோடிகள் கிடைக்கப் போவதை நாம ஏன் கெடுத்துக்கணும் என்று 5 கோடின்னா ஐந்து கோடி என்று சம்மதித்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

இப்படி தெறிச்சு ஒடுறாரே…

சேனாதிபதியின் படம் திரையிட்ட இடமெல்லாம் சிறப்பாக ஓடுகிறது. செங்கல்பட்டு ஏரியாவிலும் படத்தை வெளியிட்டிருந்தால் படத்தின் கலெக்ஷன் சாதனை படைத்திருக்கும். பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

இந்த விஷயத்தில் சேனாதிபதியின் மௌனத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். சேனாதிபதி பிரச்சனை செய்தவர்களை அழைத்து பேசியிருந்தால் இன்று மலைபோல் இருக்கும் பிரச்சனை பனிபோல் கரைந்திருக்கும்.

பொறுப்பு எடுத்து செய்ய வேண்டியவர், ஏன், தலைதெறிக்க ஓடி ஒளிந்தார்? நாளை தமிழகத்துக்கே தலைமை ஏற்க ஆசைப்படுகிறவர் இப்படி சின்ன பிரச்சனைக்கெல்லாம் தெறித்து ஓடலாமா என்று கழுவி ஊற்றுகிறார்கள்.

நியாயம்தானே.

அட போப்பா இது சின்ன மேட்டரு…

நட்சத்திர கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நடந்த பார்ட்டியில் தல பாடல் ஒலிபரப்பிய போது உசர நடிகர் அதனை நிறுத்தச் சொன்னதாக வெளியான வதந்தியை தல காதுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். உண்மையில், முகத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்த லைட்டைத்தான் அணைக்க சொல்லியுள்ளார் உசர நடிகர். உண்மையைச் சொன்னால் உப்பும் உரைப்பும் இருக்காதே.

உங்க பாட்டைத்தான் நிறுத்தச் சொன்னார் என்று தலயிடம் சொல்ல, நீங்க அங்க இருந்தீங்களா? அவர் பாட்டை நிறுத்தச் சொன்னதை கேட்டீங்களா? என்று திருப்பி கேட்டுள்ளார் தல. அவர்கள் இல்லை என்று சொல்ல, இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை, போய் வேலையைப் பாருங்க என்று புகார் சொன்னவர்களை அனுப்பியுள்ளார் தல.

அவரைப் பொறுத்தவரை பிரச்சனை சால்வ்டு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online