சங்க வரலாற்றிலேயே முதல்முறையாக… விஷால் பெருமிதம்

1461310034-9218நடிகர் சங்க வரலாற்றிலேயே சங்க கடனை முழுமையாக அடைத்து எட்டு கோடிகள் கையிருப்பிலும் வைத்துள்ளோம் என விஷால் பெருமையுடன் கூறியுள்ளார்.

நடிகர் சங்கக் கடனை அடைக்கவும், நடிகர் சங்கத்துக்கு வருவாயை ஏற்படுத்தவும் சரத்குமார் தலைமையிலான முந்தைய நிர்வாகிகள் நடிகர் சங்க இடத்தை எஸ்பிஐ சினிமாஸுக்கு சொற்ப தொகைக்கு குத்தகைக்குவிட்டனர்.

அதில் கோபமான நடிகர் சங்க உறுப்பினர்கள் தேர்தலில் சரத்குமாரையும் அவரது ஆதரவாளர்களையும் பதவியிலிருந்து துnக்கி எறிந்தனர்.

நாசர் தலைமையிலான புதிய அணி முதல்வேலையாக எஸ்பிஐ சினிமாஸுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதற்கு தேவைப்பட்ட 2 கோடியை கடனாக வாங்கியது.

அந்தக் கடனை அடைக்கவும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டவும் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினர். அதில் கிடைத்த வருவாயில் கடனை அடைத்துவிட்டதாகவும், எட்டு கோடி கையிருப்பில் உள்ளதாகவும், சங்க வரலாற்றிலேயே கடன் இல்லாமல் இவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளது இதுவே முதல்முறை என்றும் விஷால் பெருமையுடன் கூறியுள்ளார்.

தொடரட்டும் புதிய அணியின் அதிரடிகள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries