கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

201604232045074392_Dhanush-next-with-karthik-subbaraj_SECVPFதனுஷ் நடிப்பில் தற்போது ‘கொடி’ படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தை தவிர பிரபு சாலமன் இயக்கத்தில் ‘தொடரி’ என்னும் படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இப்படமும் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் ‘இறைவி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online