தொடர்ந்து தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்: ஸ்ரீபிரியங்கா வேதனை

201604231423375543_Tamil-actresses-continue-to-ignore-sripriyanka-pain_SECVPFகங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. தமிழ் நடிகையான இவர் இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சென்னையில் சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய ஸ்ரீபிரியங்கா….

“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குனர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன்.

இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்க வில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதை விட திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்கும் என்றுதான் இங்கே சொல்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர் சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம்.

சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார். அடுத்து விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்று கூறினார்.

பின்னர் பேசிய விவேக் “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online