கிளுகிளு கதாசிரியர் ஆக மாறிய நடிகை சன்னி லியோன்

201604231248250360_Sunny-Leone-turns-writer-pens-short-stories_SECVPFசெக்ஸ் படங்களில் நடித்து பிரபலமடைந்த சன்னி லியோன் பாலிவுட் சினிமா உலகில் நுழைந்த பின்னர் இந்திப்பட கதாநாயகி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். இந்த பரிணாம மாற்றத்தின் அடுத்தக்கட்டமாக ‘கிளுகிளுப்பான’ சிறுகதைகளை எழுதியதன் மூலம் எழுத்தாளர் என்ற புதிய அவதாரத்தையும் தற்போது அவர் அடைந்துள்ளார்.

பிரபல பதிப்பகத்தின் ஆலோசனைப்படி சுமார் மூன்றுமாத காலத்தில் 12 சிறுகதைகளை சன்னி லியோன் எழுதி முடித்துள்ளார். காதல்ரசம் சொட்டும் இந்த சிறுகதைகள் அனைத்தும் முழுக்க, முழுக்க கற்பனையானவையே என்று கூறும் இவர், தனது சொந்த வாழ்க்கைக்கும் இந்த சிறுகதைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம்பத்திய வாழ்க்கையில் பெண்களுக்கும் சமநிலை என்ற கோட்பாடுகளை தனது சிறுகதைகளுக்குள் விதைத்திருப்பதாக தெரிவித்துள்ள சன்னி லியோன், இந்தக் கதைகள் அனைத்தும் பெண் வாசகர்களை மிகவும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

’ஸ்வீட் டிரீம்ஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ள சன்னி லியோனின் சிறுகதைகள் வரும் மே மூன்றாம் தேதியில் இருந்து தினந்தோறும் இரவு பத்து மணிக்கு ஒவ்வொரு கதையாக ’ஜக்கர்நாட் ஆப்’ (Juggernaut app) மூலம் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

’ஜிஸ்ம்-2’, ‘ராகினி எம்.எம்.எஸ்.’, ‘மஸ்திஜாதே’ போன்ற பாலிவுட் படங்களின் மூலம் பல வாலிபர்களின் தூக்கத்தை கெடுத்த சன்னி லியோன், இனி தனது ‘கிளுகிளு’ சிறுகதைகளின் மூலம் எத்தனை வாசகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளப்பப் போகிறாரோ..?! பொறுத்திருந்துப் பார்ப்போம்!

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries