பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

bobby-simha-and-reshmi-menon‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாபிசிம்ஹா. பீட்சா, சூதுகவ்வும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பாபிசிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. நேரம், உறுமீன், உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கோ-2, இறைவி, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்தது.

ரேஷ்மி மேனன் கேரளாவை சேர்ந்தவர். இருவரும் ‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்ததாக கூறப்பட்டது. இனிது இனிது, தேநீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி ஆகிய படங்களிலும் ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். பாபி சிம்ஹாவும்-ரேஷ்மி மேனனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நேற்று காலை திருப்பதியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சென்னையில் நடக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online