போர் இல்லாத உலகம் உருவாக வேண்டும்: கமல்ஹாசன்

201604221908220816_Must-come-a-world-without-war-Kamal-Haasan_SECVPFசென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியும், இந்தோ அமெரிக்கன் அசோசியேஷனும் இணைந்து நடத்திய, மார்டின் லூதர் கிங் நினைவு சொற்பொழிவில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

விலங்குகளை வேட்டையாடிய சமூக மரபில் இருந்து விலகி, நாகரிகம் வளர்ந்தது. மனிதர்கள் நிலைத்து வாழத் தொடங்கினார்கள். அதன் பின்பும், மனிதர்களை வேட்டையாடுவதை, போர் என்ற பெயரில் விளையாட்டாக பல நாடுகள் செய்தன.

அதனால், போர் வெறி மனதில் வேரூன்றியது. உலகை வெல்லும் ஆயுதமாகவும், போர் பார்க்கப்படுகிறது. போர்க்குற்றங்களை பல நாடுகள், குற்றங்களாகவே பார்ப்பதில்லை. அதனால், வேற்றுமைகளே பெரிதும் வளர்கின்றன. உண்மையில், உலகை, போரால் வெல்ல முடியாது; அன்பால் தான் வெல்ல முடியும். அதற்கு, உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பம் என்பதை உணர வேண்டும்.

அதை தான், காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அப்படிப்பட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகளிடம், போரில்லாத உலகம் பற்றிய கனவை வளர்க்க வேண்டும். அதற்கு, அந்த தலைவர்களின், அறவழியை போதிக்க வேண்டும். அப்போது தான், பல தலைவர்கள் உருவாவார்கள். உலகில் அமைதி ஏற்படும்”

இவ்வாறு கமல் பேசினார்.

நிகழ்ச்சியில், இந்தோ அமெரிக்கன் அசோசியேஷன் தலைவர் முராரி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online