விஜய் 60 – இவர்கள்தான் நடிக்கிறார்கள்

1461484828-0114விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெறி விஜய்யின் 59 -வது படம். விஜய்யின் 60 -வது படத்தை பரதன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நகைச்சுவைக்கு சதீஷ். வில்லனாக ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி. இந்நிலையில், படத்தின் பிற நடிகர்கள் யார் என்பதையும் வெளியிட்டுள்ளனர்.

மேலே சொல்லப்பட்டவர்களுடன் அபர்ணா வினோத், ஸ்ரீமன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஸ் உத்தமன், மைம் கோபி, சரத் லோஹிதஸ்வா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online