யுவனை நோக்கி பாயும் தோட்டா…?

1460188783-5223பல வருடங்களுக்குப் பிறகு யுவனும், செல்வராகவனும், நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்காக ஒன்றிணைய உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, யுவனின் யாக்கைப் படத்தில் ஒரு பாடலை பாடினார் தனுஷ். இந்த இரண்டும் இரண்டும் நான்கு கணக்கை வைத்து மூன்றும் மூன்றும் ஏழு என்று வேறெnரு கணக்கை வதந்தியாளர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்.

என்ன அது?

யுவன், தனுஷ் மீண்டும் நெருக்கமானதால், கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு யுவனே இசையமைப்பார் என தகவல் பரப்பு வருகின்றனர்.

ஆனால், கௌதமின் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ரஹ்மான் இசையமைத்தது போல், என்னை நோக்கி பாயும் தோட்டாவுக்கும் ரஹ்மானே இசையமைக்க வேண்டும் என்று கௌதமும், தயாரிப்பாளர் பி.மதனும் விரும்புகின்றனர்.

இதுவரை ரஹ்மான் சம்மதம் கூறவில்லை. எனினும் ரஹ்மானை இசையமைப்பாளாராக ஒப்பந்தம் செய்வதில் மதன் உறுதியாக உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries