காந்தியை முன்பு எதிர்த்தேன்; இப்போது பின்பற்றுகிறேன் – கமல்ஹாசன்

1461564475-9448ஒரு காலத்தில் காந்தியை விமர்சனம் செய்த கூட்டத்தின் மத்தியில் இருந்த நான், பின்னாளில் காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் ’’சத்திய சோதனை’ நூல் கோவை சப்னா புத்தக நிலையம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், புத்தகத்தை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், “முன்பு ஒரு காலத்தில் காந்தியை விமர்சனம் செய்த கூட்டத்தின் மத்தியில் இருந்த நான், பின்னாளில் காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன்.

காந்தியை அறிந்து கொள்ள எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. அஹிம்சையை பின்பற்றுவது என்பது வீரம் ஆகும். அதை யாராலும் எளிதாகப் பின்பற்ற முடியாது. ஆனால், முயற்சி செய்தால் அகிம்சை கொள்கையைப் பின்பற்ற முடியும்.

ஹேராம் திரைப்படத்தை தயாரிக்கும் போதுதான் காந்தி குறித்து பல அரிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். காந்தி, தன் எளிமையான வாழ்க்கை முறையால் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் சின்னமாக அவர் திகழ்கிறார்.

எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது. அவரை எந்தக் கட்சியுடனும் இணைத்துப் பார்க்கக் கூடாது. இந்தச் சமுதாயத்தின் நோயாக அரசியலும், மதமும் திகழ்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online