போஸ்டரில் ரஜினி, டீசரில் அஜித்-விஜய்: கலக்க வரும் ஜி.வி.பிரகாஷ்

201604251127563727_GV-Prakash-EIPI-movie-teaser-ajith-vijay-reference_SECVPFஇசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. இவர் தற்போது ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை வருகிற 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு, ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் ஹிட்டான டயலாக்.

அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்ததால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் காக்கி உடையில் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வடிவமைத்து வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது டீசரிலும் ஏதாவது புதுமையை செய்ய நினைக்கும் படக்குழுவினர், அஜித், விஜய் குறித்த சில விஷயங்களை இந்த டீசரில் இணைத்து வெளியிடவுள்ளார்களாம். பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போன்று டீசரும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த டீசரை வருகிற 28-ந் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளார். அன்றைய தேதி மாலை 5 மணிக்கு இந்த டீசர் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries