ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்

201604261340296189_Dhansika-finish-kabali-dubbing_SECVPFரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்தில் தன்ஷிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை மற்றும் மலேசியாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பகுதிக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது தன்ஷிகாவும் தனது டப்பிங் பணியை முடித்துக் கொடுத்துள்ளார்.

டப்பிங் பணி முடிந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கபாலி டீசருக்கு தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘கபாலி’ படத்தை ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online