நடிப்பில் வெற்றி பெறுவேன்: மாயா

201604261553195387_Maya-says-will-win-in-acting_SECVPF‘டார்லிங்–2’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மாயா. இப்போது ‘உன்னோடுகா’ படத்தில் ஆரியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதில் நடித்த அனுபவம் பற்றி மாயா கூறுகிறார்…

“இந்த படத்தில் நடிக்கும் எல்லோரும் கலகலப்பாக பழகினோம். ஜாலியாக பேசிக் கொண்டிருந்தாலும், கேரமா முன்பு நின்றால் ஒரே டேக்கில் நடித்து விடுவார்கள். எனக்கு ஏதாவது தெரிய வில்லை என்றால் சொல்லித்தருவார்கள்.

என்னுடன் நடித்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அது நான் நன்றாக நடிப்பதற்கு உதவியாக இருந்தது. ‘டார்லிங்–2’ படத்தில் கலையரசன், காளி வெங்கட், எனக்கு நடிக்க உதவி செய்தார்கள். அது போல, ‘உன்னோடு கா’ படக்குழுவினர் அனைவரும் நான் நன்றாக நடிக்க உதவி செய்தார்கள்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் என்னை மிகவும் அழகாக காண்பித்துத்திருக்கிறார். ‘டார்லிங்–2’ படத்தை விட இதில் மிகவும் அழகாக இருக்கிறேன். இது நகைச்சுவை கலந்த குடும்ப படம். நிச்சயம் ரசிகர்கள் இதை வெற்றி பெற வைப்பார்கள். இதன் மூலம் நான் வெற்றிப்பட நாயகி ஆவேன். நடிப்பில் வெற்றி பெறுவேன்’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries