மசில் ஏற்றிய ஆர்யா

Arya-6-Packஆர்யா என்றால் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர், ஜஸ்ட் லைக் தட் நடித்துவிட்டு செல்கிறவர் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.

அதனை உடைத்திருக்கிறார் ஆர்யா. தனது புதிய படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.

மஞ்சப்பை ராகவ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் ஆர்யா. பழங்குடியினரை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யா பழங்குடி இளைஞராக வருகிறார். அதற்காக கடந்த 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக உடம்பை மாற்றியுள்ளார். உடல் எடையையும் 88 கிலோவாக அதிகப்படுத்தியுள்ளார்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடம்பை மாற்றிக் கொள்வது எனக்குப் பிடிக்கும் என்று ஆர்யா கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries