பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி : வாட்ஸ்-அப்பில் வெளியான தகவலால் பரபரப்பு

1461845624-5249தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சாய்சக்தி, சரியான வாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகரான சாய்சக்தி, பிரபலமான பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். முக்கியமாக, சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடரிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஒரு வாட்ஸ் அப் மூலமாக ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசியதாவது:

“என்னை உங்களுக்கு தெரியும். நான் நிறைய சின்னதிரை தொடர்களில் நடித்துள்ளேன். தற்போது நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே வந்துவிட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன்.

எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. சமீபத்தில்தான் நடிகர் சாய்பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது நான். தற்போது வாய்ப்பில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்.

என்னை நம்பி என் மனைவி, குழந்தை குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கு யார் உதவி செய்வார்கள்?. 17 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். நான் நடித்துள்ள எல்லா தொலைக்காட்சியிலும் வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால் யாரும் கொடுக்கவில்லை.

இதனால் சாக முயன்றேன். ஆனால் என் தாயார் தடுத்து விட்டார். ஆனாலும் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. நீங்கள்தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும்.

நடிப்புதான் எனக்கு சாப்பாடு போடும் என நினைத்தேன். இந்த தொலைக்காட்சிகளை நம்பி பல நடிகர்கள் இன்று தற்கொலை செய்து உயிரை விடுகின்றனர். நாங்கள் ஏழை.

எனக்கு வாழப்பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறி அழுகிறார்.

இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதைக் கேட்ட அவரின் சில நண்பர்கள், தற்போது அவரை சமாதனப்படுத்தி தற்கொலை முயற்சியிலிருந்து மீட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries