தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் கமல் படத்தின் தொடக்கவிழா

1459837353-9507நாளை கமல் மும்மொழியில் தயாரித்து நடிக்கும் படத்தின் தொடக்கவிழா நடைபெற உள்ளது.

இந்த விழா தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்த தொடக்கவிழாவை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கமல் நடத்துகிறார். கமலுடன் ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதி ஆகியோர் நடிக்கின்றனர். இளையராஜா இசை. படத்தின் பெயரை இளையராஜா தேர்வு செய்துள்ளார்.

இந்த தொடக்கவிழா குறித்து இணையத்தில் தெரிவித்துள்ள கமல், தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்கவிழா அந்தந்த மொழிகளின் தொலைக்காட்சி சானல்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். உலகநாயகன் டியூபிலும் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா மூன்று மொழி சானல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online