ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடும் ஜிப்ரான்

201604281654185681_ghibran-release-six-songs-in-six-countries_SECVPF‘வாகை சூடவா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சர சர சார காத்து வீசும் போது…’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.

சமீபத்தில் கமல் நடித்த படங்களான ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தவிர ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படத்திற்கு தற்போது இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆறு பாடல்கள். இந்த பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட ஜிப்ரான் முடிவு செய்துள்ளார்.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, சிங்கப்பூர் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஆறு நாடுகளில் ஒவ்வொரு பாடலாக வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு கமல்ஹாசன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
“முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்னும் நகரத்தை தான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல், கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்’ என்றும் கமல் கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online