இறுதிக் கட்டத்தை நெருங்கும் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை

201604272141430773_Vijay-Sethupathi-aandavan-kattalai-movie-nearing-final-stage_SECVPF (1)விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு கே இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி ‘ரெக்க’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் லட்சுமி மேனன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries