ஆறு நாடுகளில் ஆறு பாடல்கள் – ஜிப்ரானின் அதிரடி திட்டம்

1461910130-7071அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, சிங்கப்பூர் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் தயாரித்துள்ள படம் சென்னை 2 சிங்கப்பூர்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதில் மொத்தம் ஆறு பாடல்கள். பாடலுக்கு ஒரு நாடு என்று ஆறு நாடுகளில் படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர்.

சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஆறு நாடுகளில் ஒவ்வொரு பாடலாக வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு கமல்ஹாசன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

“முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்னும் நகரத்தைதான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல் கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்று கமல் வாழ்த்தியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries