சூர்யாவுடன் மோத விரும்பாத பாபி சிம்ஹா

201604301941253027_Bobby-Simha-did-not-want-to-clash-with-Surya_SECVPFபாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கோ 2’. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

சரத் இயக்கியுள்ள இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘24’ படமும் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ‘கோ 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 13ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதாவது தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்ட படம் சரியாக தேர்தல் நேரத்தில் வெளிவருவதால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online