சூர்யா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்

201604301616184833_Surya-film-famous-cricket-player-acting_SECVPFசூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘24’. விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை மே 6ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் இப்படம் மே 5ம் தேதியே வெளியாகவுள்ளது. இப்படத்தை அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்துடன் பார்க்க இருக்கிறார் சூர்யா.

மேலும் இந்த படத்தில் படக்குழுவினர் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதாவது பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். யார் அந்த கிரிக்கெட் வீரர் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online