சிம்பு படத்தின் தலைப்பு அறிவிப்பு

Simbu’s-next-titled-AAAஅஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிம்பு தனது புதிய படத்தின் தலைப்பை அறிவிக்கவிருப்பதாக கூறியிருந்தார். ‘AAA’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த அந்தப் படத்தின் தலைப்பை, சொன்னபடி நள்ளிரவு 12.01 மணியளவில் சமூக வலைதளத்தின் மூலம் புதிய படத்தின் தலைப்பை அறிவித்தார்.

இந்த புதிய படத்திற்கு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கின்றனர்.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை, க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries