வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூனம் பாஜ்வா

201605011416554540_Poonam-bajwa-put-end-to-rumors_SECVPFதமிழில் ‘சேவல்’ படம் மூலம் நடிகையான அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இப்படத்தை தொடர்ந்து ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தம்பி கோட்டை’, ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 2’ படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் நிகழ்ந்ததாக சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பூஜம் பாஜ்வா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பூனம் பாஜ்வா கூறும்போது, ‘என்னைப் பற்றி வந்த செய்தி முற்றிலும் தவறு. சமீபத்தில் எனது தங்கைக்குத் தான் திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில், வெகு சிறப்பான முறையில் நடைபெறும்’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries