கமல் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? தேர்தல் அதிகாரி விளக்கம்

201605011344446566_Kamals-name-is-voter-list-Election-official-description_SECVPFதன் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ‘என்னுடைய ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு மே 16ம் தேதி தொடங்குகிறது. அதனால் படப்பிடிப்புக்கு போய் விடுவேன். இந்த சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்களிக்க முடியாது என்றும் சொல்லலாம்…

வாக்களிக்க மாட்டேன் என்றும் சொல்லலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, என் வாக்கு முன்னரே போடப்பட்டு இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதுவும் வாக்குச்சாவடிக்குப் போன பின்னர் எனக்கு வாக்கு இல்லை என்பதை அறிந்து, நான் ஏமாற்றமடைந்தேன். விளக்கம் கேட்டபோது, வாக்காளர் பட்டியலிலேயே என் பெயர் இல்லை என்று சொல்லி விட்டார்கள்!” என்றார்.

ஆரம்ப காலம் முதல் வாக்களிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தி வரும் கமல்ஹாசனே இப்படிச் சொல்லலாமா என்று சர்ச்சை கிளம்பியிருக்கும் நிலையில், கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டோம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் (வீட்டு எண் : 4/ 172) கமல்ஹாசன் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசைப் பட்டியலை நமக்குப் பதிலாக தேர்தல் ஆணையர் அனுப்பி வைத்தார்.

79469DEC-423B-4392-93B8-12FE411D465D_L_styvpfஅவரது பெயர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online