இனி காமெடியனாக நடிப்பேன் – வடிவேலு அறிவிப்பு

1444363809-5121கடந்த தேர்தல்வரை எல்லாம் சிறப்பாகவே இருந்தது. விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு செய்த பரப்புரையால் ஏறக்குறைய மூன்றரையாண்டுகள் படமில்லாமல் ஒதுங்கி இருந்தார் வடிவேலு.

அதன் பிறகு அவர் மனதில் யார் அந்த ஐடியாவை புகுத்தினார்களோ… இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கடின முடிவொன்றை எடுத்தார்.

அதன்படி தெனாலிராமன், எலி என இரு படங்களில் நடிக்கவும் செய்தார். இரண்டுமே ப்ளாப்.

இந்நிலையில் விஷால் நடிக்கும் கத்திச்சண்டையில் காமெடியனாக நடிக்க ஒப்புக் கொண்டார் வடிவேலு.

விஷாலுடனான நட்பின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகவே அனைவரும் கருதினர். இன்று நடந்த கத்திச்சண்டை பூஜையின் போது, வடிவேலிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்தவர், இனி எனக்கு ரெண்டு டிராக்தான். ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன். இனி நிறைய படங்களில் படம் முழுவதும் வருவது மாதிரி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளேன்.

சுராஜ் எனக்கு ஏற்ற மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்றார்.

வடிவேலின் இந்த முடிவு தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries