ரஜினி ரசிகர்களை கலங்கடித்த 2.0 ரிலீஸ் செய்தி

1462261617-4368ரஜினி நடித்திருக்கும் கபாலி படத்தின் டீசர் சாதனை படைத்து வருகிறது. படம் ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கிவரும் 2.0 படமும் இந்தவருடமே திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சமீபத்திய தகவல் ஒன்று அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமிருப்பதால் படப்பிடிப்பு முடிந்தாலும், படம் திரைக்கு வர அதிக நாள்கள் பிடிக்கும். நிலைமை இப்படியிருக்க, 3 -ஆம் கட்ட படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாமலுள்ளது. அதனால், 2017 தீபாவளிக்கே படம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடமே 2.0 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் இந்த செய்தியால் வருத்தமடைந்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries