இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையை பேசும் கருடா…?

1462255058-9366ஏ.கே.47 துப்பாக்கியை கண்ணால் பார்க்காதவர்களும் காஷ்மீர் எல்லைப் பிரச்சனை குறித்து கதை எழுதி விஜயகாந்தை நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு அப்படியெல்லாம் ஜல்லியடிக்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எல்லை பாதுகாப்புப் படையை மையப்படுத்தி விக்ரம் பிரபு நடிப்பில் வாகா என்ற படம் தயாராகியுள்ளது.

திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிற கருடா படமும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையை மையப்படுத்திய என்கிறார்கள்.

இரு முகன் படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து கருடா படத்தில் நடிக்கிறார். திரு இயக்கம்.

மிகப்பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தின் கதை இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையை மையப்படுத்தியது என தகவல் கசிந்துள்ளது.

விரைவில் கருடாவின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online