பாபி சிம்ஹாவுடன் மோதும் ஜீ.வி.பிரகாஷ்

1462249535-2004ஜீ.வி.பிரகாஷ் முதல்முதலில் நடிகனானது பென்சில் திரைப்படத்தில். ஆனால், அந்தப் படம் இன்றுவரை வெளியாகாமலே உள்ளது.

இப்போது சனிதிசை விலகி படம் வெளிவரவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஜீ.வி.பிரகாஷும், ஸ்ரீதிவ்யாவும் பள்ளி மாணவர்களாக நடித்துள்ள இந்தப் படத்தை மணிநாகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் மே 13 வெளியாகும் என அறிவித்துள்ளனர். அன்றுதான் பாபி சிம்ஹாவின் கோ 2 படமும் வெளியாகிறது. மே 6 வெளியாவதாக இருந்த கோ 2, மே 6 சூர்யாவின் 24 படம் திரைக்கு வருவதால் ஒருவாரம் தள்ளி மே 13 வெளிவருகிறது.

ஜெயிக்கப் போவது பென்சிலா இல்லை கோ 2 படமா? மே 13 இந்நேரம் ரிசல்ட் தெரிந்துவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries