92ல் பார்த்த அதே விஜய்யை இப்பவும் பார்க்கிறேன்: ஸ்ரீமன்

201605052103438184_Vijay-still-look-same-as-seen-from-92-Sriman_SECVPFவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய்யின் அறிமுகப் பாடலை படமாக்கி வருகிறார்கள். இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்த ஸ்ரீமன் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது நண்பர் விஜய்யை ‘விஜய் 60’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தேன்.

ஸ்டைலீஷான லுக், நல்ல உடல்வாகு, சிறப்பாக நடனம், விஜய்யின் எனர்ஜி 1992ல் பார்த்த அதே விஜய்யை இப்பவும் பார்க்கிறேன். படத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online